22 July 2025

logo

விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு



பெலியத்தயிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரஜரட்ட குயின் எக்ஸ்பிரஸ் ரயில், முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இன்று (02) விபத்து ஏற்பட்டுள்ளது.

அஹங்கமா ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இந்த அவிபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஒரு பெண் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் படுகாயமடைந்து காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகின்றது.

(colombotimes.lk)