22 January 2025

INTERNATIONAL
POLITICAL


ஆயிரம் கோடியை தொட்ட புஷ்பா 2 வசூல்



பான் இந்தியன் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் புஷ்பா 2.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் 6 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, புஷ்பா 2 படம் 6 நாட்களில் உலகளவில் ரூ. 990 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் குறைந்து நாட்களில் ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணையப்போகும் படமாக சாதனை படைத்துள்ளது புஷ்பா 2 என்பது குறிப்பிடத்தக்கது

(colombotimes.lk)