22 January 2025

INTERNATIONAL
POLITICAL


ஏன் இந்த பழிவாங்கல்..தனுஷை விளாசிய நடிகை நயன்தாரா



நடிகை நயன்தாராவின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக Nayanthara: Beyond the Fairy Tale எனும் ஆவணப்படம் உருவாகியுள்ளது. எதிர்வரும்  18ஆம் திகதி  இதனை நெட்பிளிக்ஸ் வெளியிடுகிறது.  

இந்த ஆவணப்படம் தொடர்ந்து தள்ளிக்கொண்டே சென்ற நிலையில் , இதற்கு தனுஷ் தான் காரணம் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது தனுஷை கடும் கோபத்துடன் நடிகை நயன்தாரா விளாசியுள்ளார்.

ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்களும், நல விரும்பிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமன்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்திருக்கிறோம்.

இந்த  ஆவணப்படத்தில் 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.

சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராய் Legal Notice அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு பத்து கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது.  கீழ்த்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றும் தெரிவித்துள்ளார்

(colombotimes.lk)