22 January 2025


கங்குவா 2 நாட்களில் தமிழ்நாட்டில் செய்த வசூல்



பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்ட கங்குவா படம் மாபெரும் வசூல் சாதனைகளை படைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

முதல் நாள் கங்குவா படத்திற்கு கிடைத்த வசூல், மிகப்பெரிய அளவில் இருந்த நிலையில், தற்போது இரண்டாவது நாளில் சரிவை சந்தித்துள்ளது.
உலகளவில் ரூ. 60 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ள கங்குவா, தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, முதல் நாள் தமிழ்நாட்டில் ரூ. 14 கோடி வசூல் செய்திருந்த கங்குவா, இரண்டாவது நாள் முடிவில் ரூ. 6 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 20 கோடி வரை மட்டுமே கங்குவா வசூல் செய்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட குறைவான வசூல் என்கின்றனர்.

(colombotimes.lk)