22 July 2025

logo

முன்னாள் ஜனாதிபதியின் தலைமை பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்தால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் காங்கேசன்துறை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிஐடி காவலில் உள்ள பிள்ளையான், சிஐடி அதிகாரி ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொலைபேசி அழைப்பு விடுக்க விரும்புவதாகக் கூறிய சம்பவம் தொடர்பில்  இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

(colombotimes.lk)