கிராண்ட்பாஸ் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட சிறிமுத்து உயன அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் நேற்று (07) 10 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 12 ஐ வசிக்கும் 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.