முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே உட்பட இரண்டு சந்தேக நபர்களை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர்கள் 9 மில்லியன் ரூபாய் லஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை விரைவாக முடிக்கவும், சந்தேக நபர்களை 27 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
(colobotimes.lk)