2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணி இன்று (13) காலை ஆரம்பமாகியுள்ளது.
49 மையங்களில் இந்த நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
13314 மையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் மற்றும் அதிகாரிகள் செல்லவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்வதற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்
இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் 8352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், அவர்களில் 5006 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
மேலும், போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 3346 ஆகும்.
இந்த ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளை (14) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 171,403,54. என்பது குறிப்பிடத்தக்கது
(colombotimes.lk)