பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் பக்குலின் நகருக்குக் கிழக்கே 68 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடல் பகுதியில், 6.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிர் இழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(colombotimes.lk)
