10 October 2025

logo

வரவு செலவு அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்



பொதுத்தேர்தல் தொடர்பான வரவு செலவு அறிக்கையை வழங்காத  வேட்பாளர்கள் தொடர்பான கோப்புகளை விரைந்து முடித்து பொலிஸாரிடம்  சமர்ப்பிக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலக்கெடு நிறைவடைந்த போதிலும் வேட்பாளர்கள் குழுவொன்று வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி வருமான அறிக்கையை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வருமான செலவு அறிக்கையை வழங்காத 5 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கு எதிராக அடுத்த வாரம் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், தமது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை வழங்காத 7 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 
(colombotimes.lk)