22 November 2024


தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு - அமைதிகாலம் அமுலில்



பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நேற்று (11) நள்ளிரவுடன் நிறைவடைந்தன.

அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் தேர்தல் நடைபெறும் நாள் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், வேட்பாளர்கள் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகங்களை இன்று நள்ளிரவுக்குப் பின்னர் அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்  ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.

நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்குப் பெட்டிகள் நாளை (13) முதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தேர்தல் பணிகளுக்காக 2 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 8361 ஆகும்.

இதில் 5015 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளிலும், 3346 சுயேட்சை வேட்பாளர்களும் இந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

(colombotimes.lk)