கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தவறான தகவல்களை முன்வைத்து ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் பெற்றமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (06) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காதிலக்க, இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அதன் முன்னேற்றத்தை எதிர்காலத்தில் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
(colombotimes.lk)