டிரம்ப் படுகொலை சதியில் ஈடுபட்டதாக ஈரானியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
அமெரிக்க அதிபர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பை கொல்ல சதித் திட்டம் தீட்டியது தொடர்பாக ஈரான் நாட்டவர் மீது அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ட்ரம்ப் மீதான கொலை முயற்சிக்கு ‘திட்டத்தை வழங்கிய’ குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
51 வயதான பர்ஹாத் ஷகேரி என்ற நபரே குற்றம்சாட்டப்பட்டுள்ளதுடன்
இதுவரையில் குறித்த நபர் கைது செய்யப்படவில்லை என அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.