18 May 2026

logo

வாகன இறக்குமதி சுங்க வரியில் மேலும் 50% வரி



வாகனங்கள் மீது விதிக்கப்படும் சுங்க இறக்குமதி வரிகள் மீது கூடுதலாக 50% கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது இன்று (16) முதல் மூன்று மாத காலத்திற்குள்  அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்கள் மீது இதுவரை விதிக்கப்பட்டு வரும் 30% சுங்க இறக்குமதி வரியின் மீது கூடுதலாக 50% வரி விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மே 15 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் தொடங்கப்பட்ட கடன் கடிதங்களுக்கு (letters of credit) இந்தக் கூடுதல் கட்டணம் பொருந்தாது என நிதி அமைச்சு கூறியுள்ளது.

(colombotimes.lk)