11 August 2025

logo

உள்ளூராட்சி தேர்தலுக்கான ஆணைக்குழுவின் முடிவு



உள்ளூராட்சி  சபை தேர்தலை நடத்தும் திகதி மற்றும் பரீட்சை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அந்தத் திகதியை பயன்படுத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று கலந்துரையாடியுள்ளது.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான குறிப்பிட்ட திகதி எதுவும் தீர்மானிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் ஆணைக்குழு மீண்டும் கூடி இறுதித் தீர்மானம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக  தேர்தல் ஆணைக்குழுவின்  தலைவர் ஆர். எம். ஏ. எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளுராட்சி  தேர்தலை விரைவில் நடத்த வேண்டும், எனவே அதற்கு தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

(colombotimes.lk)