வாகன விபத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
சட்டத்தரணி ஊடாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரை கைது செய்வதற்கு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க அண்மையில் (26) உத்தரவிட்டுள்ளார்.
(colombotimes.lk)