மொரட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முராவத்தை பகுதியில் 07 கிராம் 260 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது
(colombotimes.lk)