09 May 2025

INTERNATIONAL
POLITICAL


புதிய பாப்பரசருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி



புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவின் ரொபர்ட் பிரிவோஸ்ட்டுக்கு வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ X கணக்கில் குறிப்பொன்றை வௌியிட்டுள்ளார்.

அதில், 'உங்கள் பங்கு பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளதுடன், அதன் ஊடாக உலக மக்களை வழிநடத்த உங்களுக்கு வலிமை கிடைக்க பிரார்த்திக்கின்றேன். உங்கள் தலைமை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கட்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

69 வயதான பாப்பரசர் ரொபர்ட் பிரிவோஸ்ட், அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பாப்பரசராக வரலாற்றில் இடம்பெற்றுள்ளார்.

அவருக்கு பாப்பரசர் லியோ XIV என பெயரிடப்பட்டுள்ளது.



(colombotimes.lk)