19 December 2025

logo

நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்



34 முக்கிய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தின் கலாவெவ, ராஜாங்கனை, நச்சதுவ, அங்கமுவ ஆகிய நீர்த்தேக்கங்களும் கண்டி மாவட்டத்தின் பொல்கொல்ல, விக்டோரியா, ரன்தெனிகல, மற்றும் ரந்தம்பே ஆகிய நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிவதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அதேபோன்று கண்டி மாவட்டத்தில் பொல்கொல்ல, விக்டோரியா, ரந்தேனிகல, மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கங்களும், குருநாகல் மாவட்டத்தில் தெதுரு ஓயா நீர்த்தேக்கமும், அம்பாறை மாவட்டத்தின் சேனநாயக்க சமுத்திரமும் நிரம்பி வழிகின்றன.

கலாவெவ நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் தலா 06 அடியால் திறக்கப்பட்டுள்ளதாகவும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 04 வான் கதவுகள் தலா 05 அடியாலும், மேலும் 02 வான் கதவுகள் தலா 04 அடியாலும், நாச்சதுவ நீர்த்தேக்கத்தின் 04 வான் கதவுகள் தலா 04 அடியாலும், மேலும் 03 வான் கதவுகள் தலா 02 அடியாலும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


(colombotimes.lk)