21 May 2026

logo

உலகளாவிய ரீதியில் புதிய வரியை விதித்த டிரம்ப்



உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்குப் பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய 10% உலகளாவிய இறக்குமதி வரியை விதித்துள்ளார். 

நீதிமன்றத் தீர்ப்பை 'பயங்கரமானது' என்று குறிப்பிட்ட அவர், தனது வர்த்தகக் கொள்கையை நிராகரித்தவர்களை 'முட்டாள்கள்' என்று கடுமையாகச் சாடினார். 

கடந்த ஆண்டு வெள்ளை மாளிகை அறிவித்த பெரும்பாலான உலகளாவிய இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானவை என்று நீதிபதிகள் அறிவித்த சிறிது நேரத்திலேயே டிரம்ப் இந்தத் திட்டத்தை வெளியிட்டார். 

6-3 என்ற விகிதத்திலான தீர்ப்பில், ஜனாதிபதி தனது அதிகார வரம்பைத் மீறிச் செயல்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. 

இந்தத் தீர்ப்பு, வரிகளை எதிர்த்துப் போராடிய வர்த்தக நிறுவனங்களுக்கும் அமெரிக்க மாநிலங்களுக்கும் கிடைத்த ஒரு முக்கிய வெற்றியாகும் என தெரிவிக்கப்படுகிறது.

(colombotimes.lk)