26 December 2024


தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் இன்று இறுதி முடிவு



சமகி ஜன பல வேகவின் எஞ்சிய தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான பரிந்துரைகள் தொடர்பில் இன்று விசேட தீர்மானம் எடுக்கப்படவுள்ளது

இன்று இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக கட்சியின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்

சமகி ஜன பலவேக கட்சி ஐந்து தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை கைப்பற்றியது

இதன்படி அதன் செயலாளர் நாயகம். ரஞ்சித் மத்துமபண்டார ஏற்கனவே ஒரு ஆசனத்திற்காக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்

எஞ்சிய நான்கு தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிகளுக்கான பெயர்கள் இன்று தேர்தல்கள் ஆணை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது

(colombotimes.lk)