சபாநாயகர் பதவிக்கு இதுவரை மூன்று பேரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
அதன்படி பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி மற்றும் நிஹால் கலப்பத்தி ஆகியோரின் பெயர்கள் அதற்காக முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமீப நாட்களாக, சபாநாயகர் அசோக சபுமல் ரன்வாலவின் கலாநிதி பட்டம் தொடர்பாக நாட்டில் பல சர்ச்சைகள் எழுந்தன.
அதன்படி, சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக, நேற்று (13ம் திகதி) பிற்பகல் அறிவித்தல் விடுத்துள்ளார்.
இந்நிலையில் பாராளுமன்றம் எதிர்வரும் 17ஆம் திகதி பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி தலைமையில் கூடவுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் அன்றைய தினம் புதிய சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது
(colombotimes.lk)