26 December 2024


03 இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் தபால் நிலையங்களில்



பொதுத் தேர்தலுக்கான 350,000 க்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்னும் தபால் நிலையங்களில் வைக்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் இன்று (13) தபால் நிலையங்களில் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு கிடைக்காவிட்டாலும், வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்டிருந்தால், அவர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும்
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணத்தை ஏந்தி வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

(colombotimes.lk)