03 April 2025

INTERNATIONAL
POLITICAL


தேர்தல் காலத்தில் அனர்த்தங்களைக் கையாள்வதற்கான விசேட வேலைத்திட்டம்



தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், ஆயுதப்படை மற்றும் பொலிஸ் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக அதன் பணிப்பாளர் பிரதீப் கொட்பிலி தெரிவித்துள்ளார்

குறித்த திட்டம் நாளை (12) முதல் அமுல்படுத்தப்படும்  எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(colombotimes.lk)