கனடாவில் விமானம் ஓன்று விபத்துக்குள்ளாகியது.
80 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானம் அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் இருந்து வந்த டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விமானம் விபத்துக்குப் பின்னர் விமானம் தீப்பிடித்ததுள்ளது
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அதை அணைக்க நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் விமான நிலையம் சுமார் இரண்டு மணி நேரமாக கடமைகளை முன்னெடுக்க முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(colombotimes.lk)