02 May 2025


நேபாளத்தில் இன்று 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.



நேபாளத்தில் இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தின் சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள பைரவ்குண்டா பகுதியில் இன்று அதிகாலை 2.51 அளவில் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த நிலஅதிர்வு இந்தியா, திபெத் மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலஅதிர்வால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை

நேபாளத்தின் வடக்கே அமைந்துள்ள திபெத், சீனாவின் எல்லைப் பகுதிகள் மற்றும் நேபாளத்தின் தெற்கே அமைந்துள்ள இந்தியாவிலும் கூட இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

(colombotimes.lk)