எத்தியோப்பியாவின் போனா மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 71 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த குழுவொன்றே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(colombotimes.lk)