உணவு உற்பத்தி மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு டைபாய்டு காய்ச்சலுக்கு எதிரான சிறப்பு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இந்த தடுப்பூசி சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலக மட்டத்தில் வழங்கப்படும் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்த்துள்ளார்
எதிர்காலத்தில் உணவு உற்பத்தி தொடர்பான சேவைகளில் ஈடுபட எதிர்பார்க்கும் ஊழியர்கள், காய்ச்சல் தடுப்பூசியைப் பெற்றுள்ளதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கையை வைத்திருப்பது கட்டாயமாகும் என்றும் அவர் கூறினார்.
(colombotimes.lk)