18 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை



ரம்புக்கனை – கப்பல பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண் 46 வயதுடைய கொஸ்கஹகும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
உயிரிழந்த பெண்ணுக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்தாகவும், இதனால் அவரது கணவன் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட நபர் அப்பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரம்புக்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(colombotimes.lk)