ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் 8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் காபூலில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை பல கட்டிடங்களை உலுக்கியுள்ளது
முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு மூன்று பின்அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவை முறையே ரிக்டர் அளவுகோலில் 4.5 மற்றும் 5.2 என்ற அளவில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(colombotimes.lk)