02 July 2025

logo

மீண்டும் ரஜினி - அஜித் மோதல்..



தமிழ் சினிமாவில் சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளிவந்து மோதிக்கொள்வது என்பது சகஜமாகிவிட்டது.

பேட்ட - விஸ்வாசம், வாரிசு - துணிவு போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ஒரே நாளில் வெளிவந்தது. இதில் 2019ஆம் ஆண்டு அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட ஆகிய இரண்டு படங்களும் வெளிவந்து மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் கூலி. இப்படத்தை அடுத்த ஆண்டு மே 1ஆம் திகதி  வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.

அதே நாளில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படம் வெளிவரும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே இதே தேதியில் அஜித் GBU படத்துடன் சிவகார்த்திகேயனின் 23வது படம் மோதும் என கூறப்பட்ட நிலையில், தற்போது கூலி படமும் அதே போல் வெளிவரவுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

(colombotimes.lk)