ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஓய்வெடுத்து குணமடையுமாறு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி 14ஆம் திகதி , சுவாச அமைப்பு தொடர்பான நோய் காரணமாக போப் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
88 வயதான போப் இன்று ரோம் ஜிமெல்லி மருத்துவமனையில் இருந்து புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையை விட்டு வெளியேறும் முன், போப் அங்குள்ள ஜன்னல் வழியாக பொது மக்கள் முன் தோன்ற திட்டமிடப்பட்டுள்ளது
(colombotimes.lk)