முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாகாமை காரணமாக, அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு மாத்தறை பிரதான நீதவான் சதுரங்க எரங்க திஸாநாயக்க இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.
மாத்தறை எளியகந்த வீதி, பிரவுன்ஸ்ஹில் முகவரியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியைக் கொள்வனவு செய்தமை தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் பிரதிவாதியான பசில் ராஜபக்ஷ இன்றைய தினம் முன்னிலையாகாததன் காரணமாகவே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
(colombotimes.lk)
