19 June 2026

logo

ஆசனபட்டி (Seat Belt) சட்டம் தொடர்பான அறிவிப்பு



எதிர்வரும் 20ஆம் திகதி  முதல் ஆசனபட்டி சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் மஞ்சுல குலரத்ன தெரிவித்ததாவது, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் ஆசனபட்டி அணிதல் கட்டாயம் என தெரிவித்துள்ளார் 

மேலும், வாகனங்களின் முன்புற இருக்கைகளில் மட்டுமல்லாது பின்புறம் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் ஆசனபட்டி அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை அமல்படுத்த முன்னதாக வழங்கப்பட்ட சலுகை காலம் இம்மாதம் 19ஆம் தேதியுடன் முடிவடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜூன் மாதம் 20ஆம் திகதி முதல் இந்த சட்டம் கட்டாயமாக அமல்படுத்தப்படும் என தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபை தலைவர் மஞ்சுல குலரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.


(colombotimes.lk)