15 June 2026

logo

ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்தம் - டிரம்ப் உறுதி



ஈரானுடன் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது முழுமையாக வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக ஊடக தளமான Truth Social-இல் வெளியிட்ட சிறப்பு பதிவின் மூலம் இதனை அறிவித்துள்ளார்.

இந்த சமாதான ஒப்பந்தத்தின் மூலம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த கடுமையான போர் பதற்ற நிலை முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதனை முன்னிட்டு உலக மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

(colombotimes.lk)