18 September 2025

logo
INTERNATIONAL
POLITICAL


முன்னாள் சிரேஷ்ட DIG பிரியந்த ஜயகொடிக்கு பிணை



விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

அதன்படி, கண்டி நீதவான் நீதிமன்றத்தால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்ததாகக் போலியான முறைப்பாட்டை வழங்கியமை தொடர்பில் ராகம பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், பிரியந்த ஜயகொடி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் ஜூலை 28ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

(colombotimes.lk)