பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் இலங்கை பொலிஸார் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த வருடாந்தப் போட்டிகளில் பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொள்கின்றனர். இதன்போது கலந்துகொள்பவர்களின் ஒழுக்கம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும் காலப்பகுதியாக இது அமைவதுடன், இது பாடசாலையின் கௌரவத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கமைய, பிக் மேட்ச் நடைபெறும் காலப்பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் விசேடமாகப் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டிய பல விடயங்களைப் பொலிஸார் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளனர்.
(colombotimes.lk)
