24 June 2026

logo

தொல்பொருட்களைத் தோண்டியெடுத்த மூவர் மீது குற்றச்சாட்டு



சட்டவிரோதமாக தொல்பொருட்களைத் தோண்டியெடுத்த மூன்று சந்தேக நபர்கள், அகழ்வாராய்ச்சி உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் 

தெஹியத்தகண்டியிலுள்ள முவகம்மன பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது இந்தக் குழுவினர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் வயது 24, 27 மற்றும் 37 ஆகும். இவர்கள் முறையே அகரஸ்ஸா, போகஸ்வெவ மற்றும் தெஹியத்தகண்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

(colombotimes.lk)