22 February 2025

INTERNATIONAL
POLITICAL


முதியோர்களுக்காக சிறப்பு ரயில் அறிமுகப்படுத்தும் சீனா



நாட்டில் வளர்ந்து வரும் முதியோர்களுக்கு மகிழ்ச்சி தருவது மட்டும் இல்லாமல் நாட்டை பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு செல்ல ‘சில்வர் ரயில்’ (‘silver trains’) என்ற பிரத்யேக சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்த சீனா முடிவு செய்துள்ளது.

இந்த சுற்றுலா ரயில் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ரயிலில் ஆக்சிஜன் சிலிண்டர், முதலுதவி பெட்டி, அவசர அலாரம் பட்டன்கள் இருக்கை ஏற்பாடுகள் மருத்துவ வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை என பாதுகாப்பான பயணத்தை வழங்க உள்ளது.

சீனாவில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்கள் பணத்தை செலவிட தயாராக உள்ளனர். அவர்களுக்காக இந்த புதிய ரயில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

(colombotimes.lk)