Clean Srilanka திட்டத்தின் விரும்பிய நோக்கங்களை பாடசாலை அமைப்புக்கு எடுத்துச் செல்வதற்காக கல்வித் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கான பயிற்சித் திட்டம் சமீபத்தில் கல்வி அமைச்சில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் மூத்த கூடுதல் செயலாளர்கள் ஜி. எம். ஆர். டி'அபோன்சோ, எச். எம். கே. ஜே. பி. குணரத்ன உள்ளிட்ட ஜனாதிபதி பணிக்குழு அதிகாரிகளின் தலைமையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரந்த மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சுகாதாரம், கழிவு மேலாண்மை, மாணவர்களின் நடத்தை மற்றும் நெறிமுறை குணங்களை வளர்ப்பது போன்ற கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட தொடர் திட்டங்களைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.