நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலை இன்று (02) முதல் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது.