29 January 2026

logo

வசூலில் சாதனைகளை குவிக்கும் அமரன்



ரங்கூன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இப்படத்திற்கு பின் இவர் இயக்கத்தில் உருவான இரண்டாவது திரைப்படம் அமரன்.

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து நாட்டிற்காக உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையகமாக வைத்து எடுக்கப்பட்ட, இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் நடித்திருந்தனர்.

மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள அமரன் படம் உலகளவில் இதுவரை ரூ. 260 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இப்படம் 13 நாட்களில்  ரூ. 129 கோடி வசூல் செய்துள்ளது.

(colombotimes.lk)