30 May 2026

logo

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்



மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் 03 ஆம் பிரிவின் இரண்டாம் கட்டத்தின் கீழ், ரம்புக்கனவிலிருந்து கலகெதர வரையிலான பிரிவில் அபிவிருத்திப் பணிகள் நாளை (29) ஆரம்பிக்கப்பட  உள்ளன.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இத்திட்டம் ஆரம்பித்து வைப்படவுள்ளது 

சாலை அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அனுராத ஹெட்டியாராச்சி, இவ்வகையில் 18.7 கிலோமீட்டர் தூரம் அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாகவும் ,முதல் கட்ட அபிவிருத்திப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் நிறைவடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

(colombotimes.lk)