கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பாதகமான வரிக் கொள்கைகளால் உருவாக்கப்பட்ட அழுத்தத்தை எதிர்த்துப் போராட வலுவான நாடாளுமன்றத்தை உருவாக்குவதே தனது குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்தார்
கனேடிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் குடிமக்கள் தனக்கு வலுவான ஆணையை வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
(colombotimes.lk)