27 May 2026

logo

எபோலா பரவல் - கனடா அதிரடி தீர்மானம்



எபோலா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக, ஆப்பிரிக்காவின் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தற்காலிக பயணத் தடையை விதிக்க கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 அதன்படி, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, உகண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் புதன்கிழமை முதல் 90 நாட்களுக்கு கனடாவுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 எபோலா வைரஸ் கனடாவுக்குள் நுழைவதையும், அது நாட்டில் பரவுவதையும் தடுப்பதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

(colombotimes.lk)