22 January 2025

INTERNATIONAL
POLITICAL


கங்குவா பிரமாண்டத்தின் உச்சம் வெளியான முதல் விமர்சனம்



தமிழ் சினிமாவில் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வருகிற 14ஆம் திகதி வெளிவரவிருக்கும் திரைப்படம் கங்குவா. சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணியில் இப்படம் அமைந்துள்ளது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் கே.ஈ. ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நட்சத்திரங்களான திஷா பாட்னி மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் கங்குவா படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், படத்தை பார்த்த சென்சார் குழுவினர், படக்குழுவை மனதார பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

(colombotimes.lk)