1,300 ஆண்டுகள் பழமையான ஒரு கோயிலும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரியாவில் உள்ள அதிகாரிகள், சியோல் பகுதியில் வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று வீசுவது இந்த காட்டுத்தீ பரவுவதற்கு காரணமாக அமைந்ததாக கூறுகின்றனர்.
தீ விபத்தில் 200க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும், 27,000 பேரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென் கொரியாவின் ஆறு தென்கிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்ட காட்டுத்தீ 43,330 ஏக்கர் நிலங்களை எரித்து 19 பேர் காயமடைந்துள்ளனர்.
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 9,000 தீயணைப்பு வீரர்களும் 130க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(colombotimes.lk)