பண்டிகைக் காலத்தில் அரசாங்கத்தால் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களடங்கிய நிவாரணப் பொதிகளை இன்று முதல் பெற்றுக் கொள்ள முடியும்.
நாடு பூராகவுமுள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மற்றும் COOPFED விற்பனை நிலையங்களினூடாக நிவாரணப் பொதியைப் பெற்றுக்கொள்ளலாம்.
5,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்களடங்கிய நிவாரணப் பொதியை 2,500 ரூபாய்க்குக் கொள்வனவு செய்ய முடியும்.
இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த நிவாரணப் பொதியை கொள்வனவு செய்ய முடியும் என அரசாங்கம் அண்மையில் அறிவித்தது.
(colombotimes.lk)