24 June 2026

logo

பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு



இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் இன்று (02) மாலை முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மேல் மாகாணம், சபரகமுவ மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு அதிகமான கனமழை பெய்யும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

(colombotimes.lk)