10 August 2025

logo

ஹெலிகாப்டர் விபத்து - 08 பேர் பலி



ஆப்பிரிக்க நாடான கானாவில் இடம்பெற்ற  ஹெலிகாப்டர் விபத்தில் இரண்டு அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எட்வர்ட் ஓமனே போமா மற்றும் சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் இப்ராஹிம் முர்தலா முஹம்மது ஆகியோர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

கானா மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கத் தொழிலைத் தடுக்க ஒபுவாசி நகருக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


(colombotimes.lk)